fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை , 20 கிராம் முந்திரி , 20 கிராம் திராட்சை , 5 கிராம் ஏலக்காய் , 2 ஆதி நீல கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்க பணமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில்7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அந்த பரிசு பொருட்கள் வழங்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

மேலும் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை பெறக்கூடியவர்கள் மட்டுமின்றி , ‘என் ‘ கார்டுகள் என்று சொல்லப்படும் எந்த பொருட்களும் வாங்காதவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரொக்கப்பணம் ரூ.1000 கொடுப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த ரொக்கப்பணம் ரூ.1000 கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரொக்கப்பணமான ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு மட்டும் தடை மற்ற பொருட்களை வழங்க தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close