fbpx
RETamil News

கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

 

கடந்த வாரம் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில், பேரிடர் மீட்பு குழு, அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.
விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

கனடாவில் உள்ள துரந்தோவில் டிசம்பர் 24-ஆம் தேதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close