அரசியலில் திடீர் பரபரப்பு..! ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
Tamilnadu chief minister edapaddi palanisamy met governor purohit

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் பாதிப்பும் இன்னமும் குறைய வில்லை. இன்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தலைநகர் சென்னை உள்பட பல இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து பேசினார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.















