வேகமாக பரவும் டெங்குவின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்….
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது.
டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம் வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் வகை இறப்பு வரை கொண்டு சென்று விடும்.
மூட்டு வலி, சருமத்தில் திட்டுக்கள், வீங்கிய லிம்ப் கோடுகள் இவையும் `டெங்கு’ காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பே. குழந்தைகளைப் பாதிக்கும் பொழுது வயிற்று வலியும், இரத்த ஒட்ட பாதிப்பும் ஏற்படுகின்றது.
தடுக்கும் வழிமுறைகள்:
பப்பாளி இலை சாறு டெங்கு காய்ச்சலை சரி செய்வதாகக் கூறப்படுகிறது. நிறைய விஞ்ஞான ஆய்வுகள் இதைப் பற்றி செய்யப்பட்டுள்ளன. பப்பாளி இலை சாறு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் திறன் கொண்டது. மலேரியா, புற்றுநோய் இவற்றினை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றன.
பப்பாளி இலையில் உள்ள கைமோபப்பின், பப்பின் என்ஸைம்கள் இரத்தத்தில் பிளேட்லெட் அளவினை சீர் செய்யும் குணம் கொண்டவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கல்லீரலையும் சீர் செய்யும் குணம் கொண்டவை என ஆய்வுகள் கூறுகின்றன.
கொசுக்களாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் வீட்டைச் சுற்றி எங்கும் நீர் தேக்கம் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள்.
வீட்டிலும் காலி பக்கெட் போன்றவைகளை சிறிதும் நீர் இல்லாமல் கவிழ்த்து வையுங்கள்.
கொசு தவிர்ப்பிற்கான வலை, மருந்து இவற்றினை கண்டிப்பாய் பயன்படுத்துங்கள்.
மூடிய கதவின் கீழ் சிறிது இடைவெளி கிடைத்தாலும் கொசு புகுந்து விடும். கவனம் தேவை.
குப்பை கூடையை நன்கு மூடி வையுங்கள்.
அறைக்கதவுகளை மூடி சிறிது கற்பூரம் கொளுத்தி வையுங்கள். 15 நிமிடம் கதவை திறக்காதீர்கள். கொசுக்கள் ஓடிவிடும்.
நொச்சி செடியினை வீட்டில் வைக்க கொசு கிட்டே வராது.