லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி – புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மதுபானங்களின் வருகை குறைந்து உள்ளதால் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும், சாவடி சுங்கச்சாவடிகாலை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கடந்த 20ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
பெங்களூரு, ஓசூர், மேட்டூர், மேட்டுப்பாளையம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து புதுச்சேரிக்கு காய்கறிகளின் வரத்து நின்று போய் உள்ளது.
இதன்காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை பெரிதும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரிக்கு வருவாய் ஈட்டி தரும் தொழிலான மதுபான விற்பனையும் லாரிகளின் வேலை நிறுத்தத்தால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மது விற்பனை செய்யும் 300க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுபான லாரிகள் வரவில்லை.
இதே நிலை நீடித்தால் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மதுபான தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.