ரசம் பொடி !

தேவையான பொருட்கள்:
தனியா 1/2 கப்
கறிவேப்பிலை
மிளகு 1/4 கப்
சீரகம் 1/4 கப்
கடலை பருப்பு 1/4 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
காய்ந்த மிளகாய் 8-10
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
பெருங்காயம் பொடி 1 ஸ்பூன்
செய்முறை:
மிதமான சூட்டில் வாணலியை வைத்து அதில் முதலில் தனியா இட்டு வதக்கவும். அதில் கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனை எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்து கொள்ளவும். பின்னர் மிளகு சேர்த்து வருத்து கொள்ளவும். பின்னர் சீரகம், ஒன்றன் பின் ஒன்றாக கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் வருத்து வைத்து கொள்ளவும். நன்றாக ஆறினதும் அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். அதன் பின் மஞ்சள் தூள், பெருங்காயம் தூள் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். சுவையான ரசம் பொடி தயாரானதும் அதனை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.