சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதை அடுத்து, பாசனத்திற்காக அணையில் இருந்து ஜூலை 19 ம் தேதி அன்று தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடிக்கும் மேல் கடந்துள்ளது.
இன்று (ஜூலை 18) காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 1.07 லட்சம் கனஅடியில் இருந்து 1.04 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 102.68 அடியை எட்டி உள்ளது. அணையின் நீர்இருப்பு 68.35 டிஎம்சி.,யாக உள்ளது.
குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.