RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக் காரணமாக, அவரின் இறுதி மரியாதையில் கூட பங்குபெறவில்லை.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டதால், தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கார் மூலம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்தனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வி, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.