fbpx
RETamil Newsதமிழ்நாடு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் அப்துல் கலாம் , இவர் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர். இவர் மென்மையான அணுகுமுறை உள்ளவர் , மாணவர்களுக்கு ஒரு நல்ல உந்துகோலாக இருந்தவர், அறிவியலின் மீது மிகப்பெரிய நாட்டம் இருந்ததால் இன்னுமும் நாட்டு மக்களின் இதயத்தில் நிலைத்து நிற்கிறார். இதையொட்டி அவரது 87-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

ராஷ்டிரபதி பவனில் அவரது உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதையை செலுத்தினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதே போல் பல இடங்களில் அவரது உருவ படத்திற்க்கும் , சிலைக்கும் மார்கள் தூவி மரியாதையை செலுத்தப்பட்டது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவரது சேவையை நினைவு கூர்ந்தனர். மேலும் மோடி அவர்கள் தனது டிவிட்டர் பதிவில், ‘ அப்துல் கலாம் ஒரு சிறந்த ஆசிரியராகவும்,மாணவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும், மிக சிறந்த விஞ்ஞனியாகவும் , நல்ல ஜனாதிபதியாகவும் விளங்கியதால் அவர் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இப்போதும் வாழ்ந்து வறுகிறார் ‘ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close