RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
மக்களை பார்த்ததற்காக சேலத்தில் சீமான் கைது!

சேலம் மக்களிடம் 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்ட போது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
எங்களுக்கு ஆறுதல் கூற வந்தவரை ஏன் இப்படி செய்கின்றீர்கள் எனக் கேட்டு சேலம் மக்கள் இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இது குறித்து பேசிய மக்கள் தங்கள் பிரச்சனைகளை தான் பிரச்சனையாக கருதி போராடும் ஒரே தலைவராக சீமான் மட்டுமே உள்ளார்.
மேலும் எங்களிடமே ஓட்டு வாங்கி எங்களுக்கே துரோகம் செய்யும் அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும் வரும் தேர்தல் முதல் இப்போது அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அரசியலை நினைத்துக்கூட பாக்க முடியாதவாறு செய்வோம் என்றும் மக்கள் தெரிவித்தனர்.