fbpx
HealthTamil News

பேன் , பொடுகை போக்க சில எளிய வழிகள்

தற்போதுள்ள கால கட்டத்தில் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவான தொல்லையாக உள்ளது இந்த பேன் மற்றும் பொடுகு தொல்லை.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமா இந்த தொல்லை அணைத்து தரப்பினருக்கும் தொந்தரவு தரும் விஷயமாக உள்ளது இந்த பொடுகு தொல்லை.

பேன் ஒழிய கஞ்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம் பேன் அறவே ஒழியும்.

மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வந்தாலும் பெண் தொல்லை நீங்கும்.

சீதாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காய்யில் கலந்து குளித்து வந்தால் பேன் , ஈறு அழிந்து கூந்தலும் மென்மையாகும்.

அரளிப்பூவையும் கூந்தலில் வைத்தால் பேன்கள் பயந்தோடிவிடும்.

Related Articles

Back to top button
Close
Close