Others

பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை தவறுதலாக வைத்து தைத்த சம்பவம்….!

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது மனைவி சங்கீதாவுக்கு 2010ம் ஆண்டு செப்டம்பர் அயனாவரம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்தின்போது சிசேரியன் அறுவை சிகிச்சையும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி, மாதவிடாய் ரத்தப்போக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமார் 5 செ.மீ. நீளமுள்ள அறுவை சிகிச்சை ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கீதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்தபுகார்அயனாவரம்போலீசுக்குஅனுப்பப்பட்டது. ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக்கோரி சங்கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.வி.சாலின் நிஷா, மருத்துவர்களின் அலட்சியத்தால் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைக்கப்பட்டதால் மனுதாரர் கடுமையான உடல் பாதிப்புகளையும், மன உளைச்சலையும் சந்தித்ததாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். அரசு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் இந்து கருணாகரன் மற்றும் வழக்கறிஞர் நித்யா முத்துகுமாரசாமி ஆகியோர் ஆஜராகி, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதுவரை கடுமையான வலியால் அவதிப்பட்டதாகக் கூறும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்தினகூலிதொழிலாளியின் மனைவி என்பதால், பொருளாதார வசதியின்மை காரணமாக வலியை பொறுத்துக் கொண்டிருக்கலாம். கீழ்ப்பாக்கம்அரசுமருத்துவமனையின் சிகிச்சை குறிப்புகளில் அவரது வயிற்றில் ஊசி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்அலட்சியத்தைப் புறக்கணிக்க முடியாது. இச்சம்பவம் குறித்து விசாரணை அவசியம். எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது.தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மற்றும் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி இரு தரப்பினரையும் விசாரிக்க வேண்டும். மனுதாரருக்கு தரப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்து 2 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close