Others

ஆவடி அரசு பொது மருத்துவமனை குறைகள் சீர்செய்ய அரசுக்கு வேண்டுகோள்…

ஆவடி மருத்துவமனை கட்டுமானம் நீடிக்கும் பணிகளால் நீளும் திட்ட செலவு:  விரைந்து முடிக்க கோரிக்கைஆவடி அரசு பொது மருத்துவமனை கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ. 2.75 கோடியில் கட்டப்பட்டது. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோவில்பாதாகை, மிட்டனமல்லி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, அம்பத்தூர் மற்றும் ஆவடி சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில்இருந்துபொதுமக்கள்தினமும்1,000க்கும்மேற்பட்டோர்சிகிச்சைபெறுகின்றனர்.இதற்கு இடையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றக்குறையால், பொதுமக்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.ஆவடி அரசு பொது மருத்துவமனையை கூடுதல் வசதிகளுடன் நவீன மயமாக்க ஜப்பான் நாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் ரூ.45 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன இந்த புதிய மருத்துவமனை கட்டடம் 1.79 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் தரைத்தளம் உள்பட 3 தளங்களுடன் 54,235 சதுரடியில் கட்டப்பட்டது. மேலும், ரூ. 5.85 கோடியில் மருத்துவ உபகரணங்கள், இரு மின் தூக்கிகள், தீயணைப்பு உபகரணங்கள், 250 கிலோ வாட் திறன் கொண்ட இருஜெனரேட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திமுக ஆட்சியில் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவீன மயமாக்கப்பட்ட அரசு மருத்துவமனை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குவந்தது.அனைத்துவசதிகள்இருந்தும்மருத்துவர்கள்,ஊழியர்கள்பற்றாக்குறையால்நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.இங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை செய்து விட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை,கீழ்ப்பாக்கம்மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்படுகிறார்கள்.பலகோடியில்கட்டப்பட்டமருத்துவமனை முழுமையாக மக்கள்பயன்பாட்டுக்கு வராமல் முதலுதவி மையம் போல் செயல்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் க.கனகவேல் கூறியது: ஆவடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.இங்கு 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், 5 மருத்துவர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.அவர்களில் ஒரு சிலர் கூட அவசரப் பணிக்காக திருவள்ளூர், திருத்தணி, திருவொற்றியூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். இங்கு 140-க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.தினசரி இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி இருந்த சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு செவிலியர்கள் 40 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், 18 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியவில்லை. மேலும் தினசரி 40-க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸ் சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்த மருத்துவர்கள் இல்லை. ஆய்வகம், துப்புரவு ஊழியர்கள் போதுமானதாக இல்லை. இதனால் ஆய்வகம் மற்றும் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைக்கு பாதுகாவலர்கள் கிடையாது. கடந்த 2018-இல் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்கூறு சோதனைக் கூடம் செயல்பாட்டில் இல்லை. இதனால் ஆவடி பகுதியில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து மரணம் ஆகியவற்றினால் ஏற்படும் இறப்பினால் சடலத்தை உடற்கூறு சோதனை செய்ய உறவினர்கள், கீழ்ப்பாக்கம் மற்றும் போரூர் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனால் மக்களுக்கு பொருள்விரயமும், கால விரையமும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல ஆகும் வாகன செலவையும் இறந்தவர்களின் உறவினர்கள் தான் ஏற்கும் நிலை உள்ளது. மருத்துவமனையை முழுமையாக மக்கள் பயன்பாட்டுற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Related Articles

Back to top button
Close
Close