ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான கால அட்டவணை விரைவில் அறிவிப்பு…
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைந்துள்ள அரசுகளின் பதவிக்காலம், அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து, அங்கு சட்டசபை தேர்தல்கள் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல் கமிஷன் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது.முதற்கட்ட பணிகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், தேர்தல் கமிஷனின்துணைதேர்தல்கமிஷனர்கள்நிலையிலானகுழுதற்போதுஆய்வுமேற்கொண்டுள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த குழுவின் பயணம் நிறைவடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இந்த குழுவின் முதற்கட்ட பயணம் முடிந்துள்ள நிலையில்,மேலும்இருபயணங்கள்திட்டமிடப்பட்டுள்ளன.அதேசமயம்,கோவாமாநிலத்துக்கான பயணம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. துணை தேர்தல் கமிஷனர்கள் குழுவின் பயணத்தை தொடர்ந்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் கமிஷனர்கள் ஐந்து மாநிலங்களிலும் ஆய்வு செய்வர். அப்போது,சம்பந்தப்பட்டமாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துவர்.பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும், இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைந்து, ஐந்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, தேர்தல் கமிஷன் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.