மாத்தூர் 19வது வார்டு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர்.

மணலி மண்டலம்,
மாத்தூர் 19வது வார்டு காமராஜர் நகரில் தனியாருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை 2 பேர் தங்களுடைய நிலம் என சொந்தம் கொண்டாடி வந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர்.இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி, மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டின் கட்டிட ஆவணத்தை ஆய்வு செய்த போது, மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து இந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள்சீல்வைத்து,தாங்களாகவேஇடித்துக்கொள்ளவேண்டும்எனசம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவகாசம் கொடுத்தும் அவர்கள் கட்டிடத்தை இடிக்காததால், நேற்று காலை உதவி ஆணையர்அரவிந்தன்தலைமையில்,செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர் சுமித்ரா, உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர்..