Others

மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவைகள் முடங்கியதால்…..?

ஏஐ சூறாவளி கையை மீறிப்போகுது.. பல ஆயிரம் ஊழியர்களை.. ஒரே நாளில் நீக்கிய மைக்ரோசாஃப்ட்.. போச்சு | Ai is getting out of hand: Microsoft laid off more than 9000 workers on single ...மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவைகள் முடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது.உலகம் முழுவதும் ஐ.டி. துறை மற்றும் பிற நிறுவனங்களில் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.சர்வர்களை மீண்டும் பயன்பாட்டிற்குகொண்டுவரும்பணிகள்தீவிரமாகநடைபெற்றுவருவதாகமைக்ரோசாஃப்ட்நிறுவனம்விளக்கம்அளித்துள்ளது.தானியங்கி சோதனைகளின் போது சில சர்வர்கள் எதிர்பாராதவிதமாகச் செயலிழந்ததாலேயே இந்தத் தடை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் மற்ற சர்வர்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.மேலும், இந்த சர்வர் முடக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மீட்கப்பட்ட சர்வர்கள் நிலையாக இருப்பதாகவும், மீதமுள்ள பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் ஆன்லைனுக்குக் கொண்டுவரப் பணியாற்றும் அதே வேளையில், தரவுப் போக்குவரத்தை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடுவதன் மூலம் சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளில், குறிப்பாக எக்ஸ்சேஞ்ச் ஆன்லைனில், பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக வரும் புகார்களை நாங்கள் அறிந்துள்ளோம், மேலும் அவற்றைசரிசெய்வதற்கானநடவடிக்கைகள்மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தசர்வர்முடக்கத்தால்,மைக்ரோசாஃப்ட்அமைப்புகளைச் சார்ந்திருக்கும் வணிகச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாஃப்ட்இணைப்புகளில் உள்ள பாதிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும், புதிய இணைப்புகள் துண்டிக்கப்படலாம் மற்றும்கருவிகள்எதிர்பார்த்தபடிசெயல்படாமல்போகலாம்என்றும்ஓபன்ஏ.ஐ.எச்சரித்துள்ளது.சேவை முடக்கத்தை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் தளத்தில், அவுட்லுக் தொடர்பான சிக்கல்கள் குறித்த புகார்கள் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் 1,38,058 ஆக உச்சத்தை எட்டி, பின்னர் மாலை 34,490 ஆகக் குறைந்தது. மைக்ரோசாஃப்ட் 365 செயலிகளின் புகார்கள் 13,000 ஆகக் குறைந்தன. அதே நேரத்தில், 763 பயனர்கள் டீம்ஸை அணுகுவதில் சிக்கல் இருப்பதாகப் புகார் தெரிவித்திருந்தனர்.இந்த சர்வர் முடக்கத்திற்கு முன்னதாக, கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட்டின் அஸூர் கிளவுட் தளத்தில் மற்றொரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது; இது அந்நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மென்பொருள்களையும், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button
Close
Close