Others

செந்தில் குமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது…

Rs 40 lakh relief for the family of the SSI killed in Theni CM Vijay announcesதேனியில் நேற்று முன் தினம் இரவு, அதாவது தீபாவளி பண்டிகை அன்று எஸ்எஸ்ஐ செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேனி காவல் நிலையத்தில் தேனிமாவட்டகாவல்கண்காணிப்பாளர்பிரவீன்கௌதம்செய்தியாளரைசந்தித்துபேசினார்.அப்போது அவர் கூறியிருப்பதாவது: நேற்று முன் தினம் இரவு 9:45 மணி அளவில் எஸ்எஸ்ஐ செந்தில்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் சாலை நடுவே வெடி வெடித்து கொண்டு கொண்டிருந்தார்கள்.அப்போது செந்தில்குமார்தனதுசெல்போனில்வீடியோஎடுத்துதேனிகாவல்நிலையத்திற்குபுகார்அளித்துள்ளார்.இதைபார்த்தஇளைஞர்கள் செந்தில்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது செல்போனை பறிக்கும்போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.இந்த சம்பவம் குறித்து எனது தலைமையில் விசாரணை நடத்தி மகி என்கிற மகேஸ்வரன், சூரியமூர்த்தி, தீபன் ராஜ், ஆகாஷ், கெளதம், பரத் பிரனேஷ் ஆகிய 6 இளைஞர்களை இதுவரை கைது செய்துள்ளோம். மேலும் வேறு யாரும் இதில் தொடர்பில் உள்ளார்களாஎன்றுவிசாரணைசெய்துகைதுநடவடிக்கைமேற்கொள்வோம்.அவரதுகுடும்பத்திற்குஅரசுசார்பில்நிதிஉதவிவழங்கப்பட்டுள்ளது,மேலும்அவர்களுக்குஎன்னஉதவிகள்தேவைப்படுமோஅதைசெய்துகொடுப்போம்.சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவுமில்லை, காவல்துறை சார்பில் எந்த சிசிடிவியும் வைக்கப்படவில்லை. நேற்று தீபாவளி தினத்தன்று மாவட்டத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தோம், பல புகார்கள் வந்தது. அதற்கு உடனடியாக சம்பவஇடத்திற்குச்சென்றோம்.செந்தில்குமார்படுகொலைtheni senthil kumarசெய்யப்பட்ட சம்பவத்தில் அவர் புகார் அளித்த ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்றோம் என தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எஸ்எஸ்ஐ உள்பட 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர். அது போல் கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ செந்தில் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய், ரூ 40 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார். ஆனால் இது போதாது அவரது குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மரியாதை ஏடிஜிபி அன்பு மற்றும் மதுரை தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி மற்றும் தேனி எஸ்பி பிரவின் கௌதம் ஆகியோர் செந்தில்குமாரின் உடலை சுமந்தபடி தேனி அல்லிநகரம் நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு செந்தில் குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close