Others

திருவண்ணாமலை –ஆணாய்பிறந்தான் கிராமத்தில் மாணவியர், காப்பாளர்பலி…

Brand New Tiruvannamalai Railway Station | Modern Look of Temple City  Junction 🚆 #Tiruvannamalai #RailwayStation #TempleCity #TamilNaduTourism  #SouthIndiaTravel TravelVlog ArunachaleswararTempleடி.டி.எச்., கோர் டிரஸ்ட் என்ற அமைப்புடன் இணைந்து அரசு உதவி பெறும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையம்இயங்குகிறதுஇங்கு, 46 மாணவியர் தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில், 34 மாணவியர் தீபாவளிக்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுதியில், 12 மாணவியர் மட்டும் இருந்தனர்.மதியம், 1:00 மணி அளவில், ஆணாய் பிறந்தான் கிராமத்தை சேர்ந்த விடுதி காப்பாளர் தேன்மொழி, மாணவியர், உட்பட, 12 பேர், இந்தமையத்தைஒட்டிபின்புறமுள்ளசமுத்திரம்ஏரியில்குளிக்கசென்றனர்.அப்போது, இந்த மையத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், ‘ஏரியில் குளிக்க செல்ல வேண்டாம்’ என, மாணவியர் மற்றும் விடுதி காப்பாளரை எச்சரித்தனர். அதை மீறி அவர்கள் ஏரியில் குளிக்க இறங்கியபோது, சில மாணவியர் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கினர்.இதைப்பார்த்து, உடன் சென்ற சக மாணவியர் அலறி கூச்சலிட்டனர். விடுதி காப்பாளர் தேன்மொழி, மூழ்கிய மாணவியரை காப்பாற்ற முயன்றார்.அந்தநேரத்தில்,ஏரியிலிருந்துதப்பிய,7மாணவியர்பொதுமக்களைஉதவிக்குஅழைத்தனர்.அதற்குள் தேன் மொழி மற்றும் நான்கு மாணவியர் என, 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். பின்னர், அங்கு கட்டட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், ஏரியில் இறங்கி, 5 பேரின் சடலத்தையும் மீட்டனர்.தேன்மொழி (விடுதி காப்பாளர்) விஜயலட்சுமி (மாணவி) அல்லி (மாணவி)பூமிகா (மாணவி) வள்ளியம்மாள் (மாணவி) கலெக்டர் வந்தனா கார்க் மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 

Related Articles

Back to top button
Close
Close