முதல்வர் விஜய்க்குமூன்று தியேட்டர்களுடன் கூடிய, ஆறு மாடி வணிக வளாகம் ஒப்புதல்…
சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன், பழைய தியேட்டர்கள் இடிக்கப்பட்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. அடுத்த கட்டமாக, திருமண மண்டபங்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன.கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி, தற்போதைய முதல்வர் விஜய் சார்பில், அவரது பொது அதிகாரமுகவராகநியமிக்கப்பட்டிருந்த வெங்கட்ராமன் என்பவர், போரூர் ஆற்காடு சாலையில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்டவிண்ணப்பித்தார். கடந்த 2025 ஆக., செப்., மாதங்களில் விளக்கம் கேட்டு,சி.எம்.டி.ஏ.,சார்பில்,வெங்கட்ராமனுக்கு கடிதம்எழுதப்பட்டது.பல்வேறுதுறைகளின்தடையின்மைசான்றுகிடைப்பதில்ஏற்பட்டதாமதத்தால்,இந்தவிண்ணப்பம்தொடர்பாக,முன்னேற்றம்ஏற்படவில்லை. அதன்பின், பிறதுறைகளின் தடையின்மைசான்றிதழ்கள்கிடைத்தநிலையில்,சாலைவிரிவாக்கத்துக்காக,1,691சதுரடிநிலம்,சமீபத்தில்மாநகராட்சிக்குஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, முதல்வர் விஜய் சார்பில்,
வெங்கட்ராமன்தாக்கல்செய்தவிண்ணப்பத்தைஏற்று,சி.எம்.டி.ஏ.,அதிகாரிகள்,வணிகவளாகம்கட்டஒப்புதல்அளித்துள்ளனர். இதன்படி, போரூரில், ஆற்காடு சாலையில், விஜய்க்கு சொந்தமான, 33,949 சதுரடி நிலத்தில், மூன்று அடித்தளத்துடன், ஆறு தளங்களுக்கு, தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் கட்ட, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.முதல் மூன்று தளங்களில் கடைகள்; நான்காவது தளத்தில், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையம்; ஐந்து மற்றும் ஆறாவது தளங்களில், மூன்று தியேட்டர்கள் அமைய உள்ளன. இது தொடர்பாக, திட்ட அனுமதி கடிதத்தை வெங்கட்ராமனுக்கு, சி.எம்.டி.ஏ., அனுப்பி உள்ளது.