RETamil Newsதமிழ்நாடு
நடிகர்களின் பின்னால் சென்றால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவை அடுத்து திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது.
மு.க. அழகிரியால் வெறும் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும். தமிழகத்தில் பாஜக தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது.
அதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என கூறினார்