HealthTamil News
தொடர் இருமலுக்கு அனைவருக்கும் பொருந்தும் எளிய நிவாரணம் .
தற்போது நம் நாட்டில் இயற்க்கை சூழல் மாறிவரும் நிலையில் குழந்தைகளுக்கும் , முதியவர்களுக்கும் ஆபத்தாக உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது மழை அடித்தாலும் சரி வெய்யில் அடித்தாலும் சரி அதனால் ஏற்படும் ஆபத்துகள் முதலில் அவர்களைத்தான் தாக்கும்.
அதிலும் முக்கியமான பிரட்சனை இருமல் தான். இவ்வாறு ஏற்படும் இருமல் இரவில் ஏற்பட்டால் அதிக தொல்லையாகத்தான் இருக்கும். இரவில் ஏற்படும் இருமலை தடுக்க ஓர் எளிய வழி என்னவென்றால் தேன் மற்றும் மிளகு தூள் ஆகும்.
பெரியவர்களுக்கோ , சிரியவர்களுக்கோ இரவில் இருமல் ஏற்பட்டால் அவர்களுக்கு தேனில் சிறிது மிளகு தூளை போட்டு 3 நாள் தொடர்ந்து இரவில் கொடுத்து வந்தால் இருமல் அறவே குறைந்து நிம்மதியாக தூங்குவார்கள்.