fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை – அரசாணை வெளியீடு

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், செவ்வாய்க்கிழமை தீபாவளியை முன்னிட்டு திங்கள் அன்று தொடர் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்ததை அடுத்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருக்கும் விதமாக திங்கட்கிழமை (நவம்பர் 5) பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எனவும், அதற்குப் பதிலாக நவம்பர் 10-ம் தேதி வேலை நாள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு மாவட்ட, சார்நிலைக் கரூவூலங்கள் செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close