தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நாளை (09.09.18) மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபா்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி செய்தியாளர்களுடன் பேசுகையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுநாள் வரை சிறையில் இருந்ததே போதுமானது என்றும் அவர்களை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.