தமிழகம் – இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்தி 600 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுவதால், அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதனால் தான் தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்காக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,600க்கும் மேல் அதிகரித்து , அதற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை மற்றும் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சென்னையை பொருத்தவரை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை , அரசு கீழ்பாக்க மருத்துவமனை , குழந்தைகள் சுகாதார கழகம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளிலும் 70-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு செகிச்சை பெற்று வருகின்றனர்.
சராசரியாக ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்து அதற்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.