Tamil Newsதமிழ்நாடு
ஜெயலலிதாவின் புதிய வெண்கல சிலை விரைவில் !
மறைந்த ஜெயலலிதாவின் உருவச் சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் சாயலில் சிலை இல்லை என கூறி பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் புதிய சிலை நிறுவப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், 800 கிலோ எடையுடன் 8 அடி உயரத்தில் ஜெயலலிதாவின் புதிய வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி எனும் இடத்தில் ராஜ்குமார் எனும் சிற்பியின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை சென்னை வந்தடைந்தது.
இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை, ஓரிரு நாட்களில் நிறுவப்பட உள்ளது.