சுவையான இட்லி சாம்பார் !

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – அரை கப்
துவரம் பருப்பு – அரைகப்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 2
பூண்டு 5-6 பல்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
சிறிதளவு புளி
காய்ந்தமிளகாய் 3
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் நீர் விட்டு கழுவி சுத்தம்செய்து ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். ஒரு 10 நிமிடம் பருப்பு ஊறட்டும். பின் அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு குக்கரை மூடி 3-4 விசில் கொடுத்து இறக்கவும்.
ஒரு கொட்டையளவு புளி எடுத்துக்கொண்டு தண்ணீரில் ஊறவைத்து விடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தளித்துக் கொள்ளவும். பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பின் புளித்தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும்.
பருப்பை கடைந்து வைத்துக்கொண்டு, புளித்தண்ணீரை சேர்க்கவும். நன்றாக கிளறி 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து லேசான கொதி வந்ததும், குக்கரை இறக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் தயார்.
இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.