சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை… என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி…
‘சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும்’ என்று மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டால், அது டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். நான் மோடியை சொல்லவில்லை, எப்போதும் ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள், அந்த ‘ரிங் மாஸ்டர்’ இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.
சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருப்பவர் தான் பழனிசாமி. அவர் தான் கோமாளி வேடம் போட்டிருக்கிறார். கோமாளியை பார்த்தீர்கள் என்றால், அப்பப்போ இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையை தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார் என்று கூறினார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தரும் வகையில், இன்று சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது எனவும் அவர் கூறினார்.