மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டம்..,
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளது. சல்லி சல்லியா போகும் பாஜக பிளான்? இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. புதிய சட்டங்கள்: இந்த புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித்திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அறிமுகப்படுத்துள்ள புதிய சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் இந்தியை திணிப்பதாக கூறியுள்ளதாக, மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டத்தை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் உள்ளதாவது: “மத்திய பா.ஜ.க. அரசால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் இன்று (5.7.2024) சென்னையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும், அந்த திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுக-வின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அழைப்பு: நண்பகல் 12 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, Ex. M.L.A., அவர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக வழக்கறிஞர் நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது. அதற்கேற்றவாறு மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் அளவுக்கு, மேலிட தலைவர்களையும், மத்திய அரசின் திட்டத்தையும் அந்த அளவுக்கு அதிமுக எதிர்க்காமலேயே இருந்தது. அதிமுக எதிர்ப்பு: ஆனால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, குறிப்பாக அதிமுகவின் படுதோல்விக்கு பிறகு, இத்தகைய செயல்பாடுகள் மாறி வருகின்றன.. விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுகவின் அரசியல் செயல்பாடுகள் வேகம் எடுத்து வருகின்றன.. ஒருபக்கம் திமுக, மறுபக்கம் பாஜக என மாறி மாறி இரு அரசுகளையுமே விமர்சித்து வருகிறது.. நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்ய மசோதா நிறைவேற்றுமாறு பாஜக கூட்டணி அரசுக்கு, கடந்த வாரம் அதிமுக வலியுறுத்தியிருந்தது. ஆனால் இப்போது, 3 புதிய சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தையே பகிரங்கமாகநடத்துவதாகஅறிவித்திருக்கிறது.. அதிமுக முன்னெடுத்து வரும் வேகத்தை, மற்ற கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன.