நீலகிரிமாவட்டத்தில் பழா மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கியிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. தற்போது மழை பெய்துவரும் நிலையில் இந்த யானைகள் வனத்தில் இருந்து சாலை ஓரம் வந்து நின்று விடுகின்றன. இதனால் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். பழங்களை பறித்து விற்பனை செய்யமுடியாததால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
இந்த யானைகளை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.