RETamil Newsதமிழ்நாடு
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மேல்துளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த் தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அங்கு குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்த அரசுத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.