காலிஃபிளவர் 65 !
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் பூக்கள் – 2 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
கார்ன் மாவு – 2 1/2 – 3 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
தயிர் – 1/4 கப் + 1 தேக்கரண்டி
தேவையான உப்பு
பொறிக்க எண்ணெய்
செய்முறை :
தண்ணீரில் உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சூடுபடுத்தவும். 5-10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். அதனுடன் காலிஃளவர் பூவை சேர்த்து கொள்ளவும். 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும். காலிஃளவரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத புழுக்கள் வெளியேறிவிடும். பின்னர் நல்ல தண்ணீரில் ஒரு தடவை கழுவி தண்ணீரில்லாமல் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, கரம் மசாலா, கொத்தமல்லி தூள், தேவையான அளவு உப்பு, சோள மாவு மற்றும் காலிஃபிளவர் எடுத்துக்கொள்ளவும். உப்பு, காரம் சரிபார்த்து நன்றாக கலந்து வைத்து விடவும். 20-30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
காலிஃபிளவர் பொரித்தெடுக்க கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 7-8 காலிஃபிளவர் கலவைகளை போடவும். நிறம் மாறியதும் அவற்றை திருப்பி போடவும். நன்றாக பொரிந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து விடவும். பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவர் எண்ணெய் வடிகட்டி மீது வைத்து வடிகட்டி பின்னர் பரிமாறலாம்.
சுவையான காலிஃபிளவர் 65 தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக இது இருக்கும்.