திமுக தலைவர் மு.கருணாநிதி கோவையில் உள்ள சிங்கா நல்லூரில் 1945 ஆம் ஆண்டு ரூ.10-க்கு வாடகை வீட்டில் குடியேறினார்.
மு.கருணாநிதி அவர்கள் கோவையில் வசித்த போது தான், அவருக்கும் எம்ஜி-யாருக்கும் நட்பு ஏற்பட்டது.
திமுக கட்சியின் தலைவரும் , முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல்நல குறைவின் காரணமாக , காவேரி மருத்துவமனையில் காலமானார்.
அவர் காலமானதை தொடர்ந்து நேற்று அவருடைய உடல் இறுதி மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , கேரளாவின் முதல்வர், கர்நாடகாவின் முதல்வர், டெல்லி முதல்வர் என பல தேசிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செய்தனர்.
இதை தொடர்ந்து நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் திமுக கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அவரது உடல் மெரினா வழியாக அண்ணா நினைவிடத்துக்கு பின்புறம் முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவையில் அவர் வசித்த வாடகை வீட்டினை நினைவில்லமாக செய்வதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின்சினிமா பயணம் கோவையில் தான் ஆரம்பம் ஆனது.
கருணாநிதி கோவையில் உள்ள சிங்கா நல்லூரில் 1945-ல் ரூ.10-க்கு வாடகை வீட்டில் தன் முதல் மனைவி பத்மாவதியுடன் குடியேறினார்.
அந்த வீட்டின் மறைந்த ராஜமாணிக்கத்தின் மகன் கூறியதாவது ;
நான் சிறு வயதாக இருக்கும் போது கருணாநிதி அவர்களை பற்றி என் தந்தை அதிகமாக கூறுவார்.
அவர் நம் வீட்டில் இருந்தபோது தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது சினிமா துறை சென்னைக்கு இடம் மாறியதும் அவரும் சென்னைக்கே சென்றுவிட்டார் என்று கூறினார்.
இந்நிலையில் என் தந்தை 1993-ல் காலமானதை அறிந்ததும் நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்தி பெருமிதப்படுத்தினார்.
அதனால் அவர் வாழ்ந்த வீட்டினை அவருடைய நினைவில்லமாக பாதுகாத்து வருகின்றோம்.
மேலும் அவர் கோவையில் வசித்த போதுதான் எம்ஜி-யாருடன் நட்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.