RETamil Newsதமிழ்நாடு
கருணாநிதியின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் வருகை
இன்று பிற்பகல் கருணாநிதியை பார்க்க மு.க . ஸ்டாலின் , கனிமொழி , மற்றும் பலர் வந்து சென்ற நிலையில் தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டவாரு கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என்பதை அடுத்து கோபாலபுரத்தில் அவரது குடும்பத்தினர்கள் வருகை அதிகரித்துள்ளது.
கனிமொழி அவர்கள் கண்ணீர் மல்க கோபாலபுரத்தில் இல்லத்தில் வருகை புரிந்துள்ளார். அதை அடுத்து போலீசார் அதிக அளவில் கோபாலபுரம் இல்லத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 6 மணிக்கு முன்பாகவே பல இடங்களில் டாஸ்மாஸ் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது . தனியார் நிறுவனங்கள் முன்னதாகவே ஊழியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். மேலும் திரையரங்குகள் அனைத்தும் இன்று மலை முதல் நாளை வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.