fbpx
Tamil News

கடுக்காயின் மருத்துவ குணங்கள்

  1. பச்சைக்கடுக்காயை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், இருமல், இரைப்பு, வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

2) கடுக்காய்த் தூளையும், பசு நெய்யையும் சம அளவு எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி, 40 நாள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி, 5 முதல் 10 மில்லி அளவு காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண் போன்ற நோய்கள் தீரும்.

3) கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சு+ரிய ஒளியில் வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு போன்றவை சரியாகும்.

4) கடுக்காயை நீரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மில்லி கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் சாப்பிட்டால். இரைப்பை பலமாகும்.

5) கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவிற்கு பின் அரை தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவர வாத நோய் குணமாகும்.

6) கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை என அரை ஸ்பு+ன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

7) 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

 

8) 200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை என அரை தேக்கரண்டி சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் குடல்புண் மற்றும் வாதநோய்கள் குணமாகும்.

9) நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குடல், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

10) கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நு}று கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகள் தீரும்.

11) கடுக்காய், நெல்லிக்காய் , தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சு+ரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

Related Articles

Back to top button
Close
Close