எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடா்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.இதில் இரண்டு நீதிபதிகள் இருவேறு தீர்ப்பை வழங்கினர். இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் முடிவு சரி என்றும் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தனர். இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தீா்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடா்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி இது குறித்து ஏ.கே.விஸ்வநாதனிடம் எடுத்துரைத்தாா். அதன் அடிப்படையில் நீதிபதி சுந்தா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.