fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் – உயர்நீதி மன்றம் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற உத்தரவிட்டும், ஏன் இதுவரை அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் வினவினார். அத்தோடு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார். ஆனால் வழக்கறிஞர் நெடுஞ்செழியனோ, இதற்கு ஒரு வார அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் அன்று அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என்றும் எச்சரிக்கை விடுதத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close