உங்கள் சமையல் அரை பூச்சிகளை அகற்ற சில வழிமுறைகள்!
தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தமாக வைத்து கொள்வது நல்லது.
உபயோகித்த சமயல் பாத்திரங்களை அன்று இரவு முழுவதும் ‘சிங்கில்’ போட்டு வைக்காமல் அவ்வப்போதோ அல்லது இரவு உறங்கச்செல்வதற்கு முன்பாகவோ கழுவி வைத்துவிடுங்கள்.
வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். பழைய செய்தித்தாள்கள், அட்டை பெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் ஒரே இடத்தில் சேர்த்து வைத்திருப்பதை தவிர்த்து விடுங்கள்.
சமையல் அரை அலமாரிகளில் விரிசல் இருந்தால் நன்கு அடைத்து வைக்கவேண்டும்.
உணவு பொருளையோ அல்லது குப்பைகளையோ திறந்து வைக்காதீர், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
மாவு, பருப்பு மற்றும் ஊறுகாய் நன்றாக மூடிய ஜாடியில் வைத்திருந்தால் அவற்றில் பூச்சிகள் வராது.
தினமும் வீட்டினை தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை வீட்டினை சோப்பு பயன்படுத்தி துடைத்து வந்தால் தேவையில்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
சமையலறை தூய்மையே கரப்பான்பூச்சி, ஈ, பல்லி ஆகியவற்றை துரத்தும் ஆயுதம்.