ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி!
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.
மீதமுள்ள கிளைகளை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக தொலைத்தொடர்பு துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மொத்தம் உள்ள தபால் நிலையங்களின் எண்ணிக்கை 1.55 லட்சம் ஆகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களையும் பேமெண்ட் வங்கியுடன் இணைக்கப்போவதாகவும் , இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் நிதி சேவை கிடைக்கும் என்றும்,
பெரும்பாலான கிராமங்களில் இதன் கிளைகள் இருப்பதால் அனைத்து மக்களுக்கும் இந்த வங்கி சேவை வழங்கமுடியும் என்று கூறினார்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் தலைமை அதிகாரி கூறியதாவது;
தற்போது 650 கிளைகளுடன் தொடங்கப்படும்.ஆனால் 3250 தபால் நிலையங்களில் பேமெண்ட் வங்கி சேவை மையம் இருக்கும்.
அது மட்டுமல்ல நாடு முழுவதிலும் உள்ள 11,000 தபால்காரர்கள் மூலம் வாங்கி சேவை வீட்டிற்க்கே சென்றடையும் என்றும் கூறினார்.
ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி கிடைத்த மூன்றாவது நிறுவனம் இந்திய தபால் துறையாகும்.
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.