அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.07 -ஆக உள்ளது. துருக்கியில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மையே இதற்க்கு காரணம் என்று கருதப்படுகின்றது.
மேலும் நேற்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.62-ஆக இருந்தது. இந்த விலை நிலவரம் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்திருப்பதை காட்டுகின்றது.