மெரினா அருகே மாநகர பேருந்து மோதி கார் விபத்துக்குள்ளானது – 1 பலி, 2 பேர் படுகாயம்
சென்னை மெரினா கடற்கரை அருகே மாநகர அரசு பேருந்தும் , காரும் மோதி விபத்துக்குள்ளானது , இதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பிராட்வேக்கு அரசு மாநகர பேருந்து சென்றுகொண்டிருந்தது , அப்போது அந்த பேருந்து சென்ற வேகத்தில் எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது திடீரென்று மோதியது . இந்த விபத்தால் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களை பொது மக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று , விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் அந்த பேருந்தை பறிமுதல் செய்து , அண்ணா சதுக்கம் நிலையத்தில் சிறை வைத்துள்ளனர்.மேலும் தப்பி ஓடிய டிரைவர் மற்றும் கண்டெக்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த விபத்தால் மெரினாவில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.















