fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னையில் வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை மளிகை, இறைச்சி,பேக்கரி கடைகள் இயங்க தடை- மாநகராட்சி

நாட்டையே ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.

தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு சில மாவட்டங்களில் மிக அதிகமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் உள்ளது. இவ்வாறு இந்த தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு அடைப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மளிகை கடைகள் , இறைச்சி கடைகள் மற்றும் பேக்கரி போன்ற கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும் பறக்கும் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close