fbpx
RETamil Newsதமிழ்நாடு

கொடைக்கானலில் 100-ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!

கொடைக்கானலில் உறைப்பனி சீசன் என்பதால் அங்கு இரவு வேளையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.இவ்வாறு பொழியும் பனி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 15-ஆம் தேதி முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வந்த நிலையில் , கடந்த 3 நாட்களாகவே உறைப்பணி சீசன் தொடங்கியுள்ளது.ஆனால் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக இருந்த நிலையில் நேற்று இரவு முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவி வருகிறது.எனவே கொடைக்கானலில் உள்ள எரிச்சாலை பகுதி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியபகுதிகளில் உரைப்பனி காணப்பட்டது.

மேலும் கொடைக்கானல் ஏரி , பாம்பரபுரம் ஆகிய பகுதிகளில் வெண்ணிற ஆடை போர்த்தியது போல் பனித்துகள்கள் காட்சியளித்தது. இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இத்தகைய கடுமையான பனிபொழிவால் கொடைக்கானலில் உள்ள மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வராத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

தற்போது மேம்மலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் , பூண்டு போன்ற பயிர்கள் இந்த உறைபணியால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொடைக்கானலில் நிலவி வரும் இந்த உறைபனி பற்றி கொடைக்கானல் வானியல் மைய விஞ்ஞனி செல்வேந்திரன் , கொடைக்கானலில் நிலவி வரும் இந்த உறைபனி பிப்ரவரி மதம் 15-ஆம் தேதி வரை நெடிக்கும் என கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close