கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடைசெய்யப்பட்ட வயதுடைய பெண்கள் பலர் ஏற்கனவே திரும்பி அனுப்பப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் கோழிக்கோட்டை சேர்ந்து பிந்து ( வயது 42 ) , மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா ( வயது 44) ஆகிய இரு பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இந்த நிகழ்வை கேரளா முதல்மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்தார்.
இவ்வாறு சபரிமலையில் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளமாநிலத்தில் முழுவது இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்மசமிதி அமைப்பு அழைப்புவிடுத்து உள்ளது.
அதனால் கேரளாவில் பேருந்துகள் மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.மேலும் தமிழக பேருந்துகளுக்கும் கேரளா எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது.















