fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அரியானாவில் ரூ.2,035 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம்!

பிரதமர் மோடி இன்று அரியானாவில் தொடங்கப்படவுள்ள தேசிய புற்றுநோய் மையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் அரியானாவில் அமைக்கப்படவுள்ள 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

உலகிலேயே முதல்முறையாக குருஷேத்ராவில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆயுஷ் பல்கலைக்கழகதிற்கு அடிக்கல் நாட்டினர். இவ்வாறு அடிக்கல் நாட்டப்படும் இந்த பல்கலைக்கழகம் ரூ.475 கோடி மதிப்பில் 94.5 ஏக்கர் பரப்பில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டி முடித்த பிறகு ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவத்திற்காக கல்வி மற்றும் சிகிச்சை வசதி இங்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் இரண்டு சுகாதார திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் பிரதமர்மோடி குருஷேத்ராவில் உள்ள பாத்சா கிராமத்தில் ரூ.2,035 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையத்தையும் தொடங்கிவைத்தார். 710 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுள்ள இந்த புற்றுநோய் மையத்தில் அனைத்து நிலை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும். இங்கு மருத்துவர்களின் அறைகளுடன் , நோயாளிகளுக்காக 800 அறைகள் வரை கட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close