சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!
Wind and heavy rainfall in Chennai and suburbs
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணிநேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், அண்ணாநகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை ஐந்து மணியளவில் சுமார் 2 மணிநேரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.
இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறிம்போது:
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.