fbpx
Tamil News

அபிராமி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வழக்கறிஞர் தமிழ்வேந்தன்

சென்னை குன்றத்தூரில் ஒன்றுமறியாத 2 குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு மிகக்கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.

அபிராமியின் கள்ளக்காதலின் விளைவாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மனைவி அபிராமி. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2011-ல் திருமணமான இவர்கள் குன்றத்தூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். இவர்களுக்கு கார்னிகா (4 வயது), அஜய் (7 வயது) என்ற இரு குழந்தைகள். பிரியாணி கடையில் பணிபுரிந்த சுந்தரத்தோடு ஏற்பட்ட கள்ளக்காதலின் விளைவாக இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பிச்சென்றார்.

இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, அவரின் நண்பர் சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளார். தற்போது அபிராமியும் சுந்தரமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார். எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close