RETamil Newsதமிழ்நாடு
விசிக மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி வெட்டிக்கொலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப் பட்டியில் தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் சாந்தி மற்றும் அவரது மகன் ஆகிய நவீன் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சாந்தியை வெட்டி கொலை செய்துள்ளனர் மற்றும் அவரது மகனையும் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
தகவலறிந்து வந்த பொம்மிடி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.