fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!

TNCC president ks alagiri about kushboo opinion

சென்னை:

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக தனது டுவிட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருந்தார்.

புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந் நிலையில், இதற்கு விளக்கம் அளித்து மீண்டும் குஷ்பூ டுவிட் செய்துள்ளார்.

அதில், தான் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும், என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு. காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம்; ஆனால் பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மை. ஏதோ லாபம் எதிர்பார்ப்பதுபோன்று கருத்து சொல்லக்கூடாது.

சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர்.

ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதுபோல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close