GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கூட்டுறவு வங்கிகள் விவாகரம்…! மத்திய அரசுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு!
Tn minister selllur raju opposes central government

சென்னை:
ரிசவ் வங்கியுடன் கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கீழ் இணைக்க அவசர சட்டம் உருவாக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இதன்மூலம் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகளும் எழ ஆரம்பித்து உள்ளன. இந் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறான முன்னதாரணம் ஆகும் என்றார்.
















