fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

“டிக் டாக் “,”ஹலோ ” செயலி நிறுவனங்களுக்கு – மத்திய அரசு எச்சரிக்கை

“டிக் டாக் “,”ஹலோ ” போன்ற செல்போன் செயலிகள் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்.துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச , பிரதமர் மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் டிக் டாக் , ஹலோ ஆகிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோடீஸில் 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பியுள்ளது. மேலும் அந்த அனைத்து கேள்விகளுக்கும் வரும் 22-ஆம் தேதிக்குள் உரிய பதிலை அளிக்கவேண்டும் அப்படி பதில் அளிக்காவிட்டால் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செயலிகள் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற முக்கிய குற்றச்சாட்டிற்கும் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இந்த செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close